Posts

Showing posts from May, 2017

சனியும் அதன் துணைக்கோள்களும்

Image
சனியும் அதன் துணைக்கோள்களும் சனி கிரகம் அழகிய வளையங்களையும் , அழகான தோற்றத்தினையும் கொண்டது. சனியின் துணைக்கோள்கள் ஒரே புகைப்படத்தில் காணக்கிடைக்கிறது. இவற்றில் Dione , Enceladus , Mimas மற்றும் Tethys ஆகிய துணைக்கோள்கள் இங்கு காணக்கிடைக்கின்றன. image credit : NASA மேலும் சில குறிப்புகள் சனியின் வளையங்களுக்கு உள்ளே சனி கோள் அற்புதமான படம்   நட்புடன் நடராஜன் அணுவும் தமிழும் atomtamil.blogspot.com

Ganymede ன் நிழல் வியாழனில் மேல்

Image
 Ganymede ன் நிழல் வியாழனில் மேல் சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய துணைக்கோள் Ganymede ஆகும் . இது  வியாழனை சுற்றி வருகிறது. கிட்டத்தட்ட பூமியின் அளவு உள்ளது. Ganymede ன் நிழல் வியாழன் மீது விழுவதை இப்படத்தில் தெளிவாக காணலாம் Image credit : NASA மேலும் வியாழனைப் பற்றி அறிந்து கொள்ள  கீழ்க்காணும்  இணைப்புகளை அணுகவும் . வியாழனின் தென்துருவம் ஜூனோ ஆய்வு திட்டம்  நட்புடன் நடராஜன் அணுவும் தமிழும்  atomtamil.blogspot.com

சுழல் கேலக்ஸி NGC 6744

Image
 சுழல் கேலக்ஸி NGC 6744 மிகப்பெரிய சுழல் கேலக்ஸியான NGC 6744 , கிட்டத்தட்ட 175000 ஒளி ஆண்டுகள் தொலைவைக் குறுக்கும் நெடுக்குமாக்க் கொண்டுள்ளது. அதாவது இதனைக் கடக்க ஒளிக்கு 175000 ஆண்டுகள் ஆகும். இதன் மையப்பகுதியில் வயதான நட்சத்திரங்களையும், வெளிப்பகுதியில் இளமையான நட்சத்திரங்களும் காணக்கிடைக்கின்றன. மேலும் இது நமது கேலக்‌ஸியான பால்வெளி அண்டத்தினை விடவும் பெரியதாக உள்ளது. Image Credit & Copyright:  Daniel Verschatse மேலும் தகவல்களுக்கு கீழ்க்காணும் இணைப்பில் பார்வையிடவும் https://apod.nasa.gov/apod/ap170526.html   நடராஜன் அணுவும் தமிழும்  atomtamil.blogspot.com

சனியின் நிழல்

Image
சனியின் நிழல் சனியின் வடக்கு கோடைக்காலத்தின் காரணமாக அதன் நிழல்  , அழகிய வளையங்களின் மீது விழுவதை இங்கு காணலாம். சனியிலிருந்து 1.2 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து கசினி விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட படம் இது ஆகும். கசினி விண்கலம் தனது இறுதிக்கட்ட ஆய்வினில் இருப்பது கூடுதல் தகவல். image credit : NASA மேலும் தகவல்களை இந்த இணையத்தளத்தில் காணலாம். www . saturn . jpl . nasa .gov   நடராஜன் அணுவும் தமிழும் atomtamil . blogspot .com

சனியின் உள்ளே

Image
சனியின் உள்ளே.... சனியினை  கசினி செயற்கைக்கோள் படம் எடுத்து வருவது நாம் அறிந்த்தே.. அது தனது இறுதிக்கட்ட ஆய்வினில் உள்ளது. இங்கு உள்ள படம் கசினி , சனியின் வளையங்களினூடே பயணிக்கையில் சூரிய ஒளி பிரதிபலிப்பதைக் காணலாம். தொலைவில் ஒளிப்புள்ளியாகத் தெரிவது நம் பூமி ஆகும். படத்தினை பெரிதாக்கிப் பார்க்கையில் நிலவையும் புவி அருகில், இடதுபக்கத்தில் காணலாம் Image credit : NASA மேலும் தகவல்களுக்கு www . saturn . jpl . nasa . gov   நடராஜன் atomtamil. blogspot .com

சனியின் மேற்பகுதி

Image
சனியின் மேற்பகுதி சனிக்கோள் வாயுக்களால் ஆக்கப்பட்டதாக உள்ளது. சனியின் மேற்பரப்பு மிக வேகமான புயல்களைச் சந்திக்கிறது. சூரியகுடும்பத்தில் வெகு வேகமாக அதாவது மணிக்கு 1800 கிலோமீட்டர் வேகத்தில் புயல்கள் இங்கு வீசுகின்றன. சனியினை ஆய்வு செய்ய நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் கசினி விண்கலமானது சுற்றி வருகிறது. இங்கு சனியின் மேற்பரப்பு படம் பிடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்த படம் சனியினை 9 இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும். image credit : NASA மேலும் தகவல்களுக்கு கீழுள்ள இணைய முகவரியினை அணுகவும் https :// saturn.jpl.nasa.gov   நடராஜன் அணுவும் தமிழும் atomtamil . blogspot .com

சூரியன் - முழுமைத் தோற்றம்

Image
சூரியன் - முழுமைத் தோற்றம் . சூரியன் மாபெரும் நெருப்புக் கோளம். இதன் மேற்பரப்பு அதீத பிரகாசம் கொண்டது. இதனை நாம் வெற்றுக் கண்ணால் பார்க்க முடியாது. இங்கு உள்ள படம். விஷேட தொலைநோக்கி கொண்டு எடுக்கப்பட்ட படம். இங்கு மஞ்சள் நிறப் பகுதிகள் வெப்பம் அதிகமான பகுதியாகவும் , கருமை நிறப்பகுதிகளை வெப்பம் ஒப்பீட்டளவில் குறைவான பகுதியாகவும் கொள்ளலாம். image credit : NASA இதுகுறித்த மேலும் பல தகவல்களை கீழ்க்காணும் தளத்தில் பெறலாம். https://www.nasa.gov/mission_pages/hinode/mission.html   நடராஜன் அணுவும் தமிழும்

சூப்பர்நோவா எச்சம்

Image
சூப்பர்நோவா எச்சம் Simeis 147 எனும் சூப்பர்நோவா எச்சதாமானது இங்கு தெளிவாக்க் காணக்கிடைக்கிறது. இது குறுக்கும் நெடுக்குமாக 150 ஒளி ஆண்டுகள் தொலைவு பரவியுள்ளது. அதாவது ஒளியானது இதைக்கடந்து செல்ல 150 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். (ஒளியின் திசைவேகம் நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்). இந்த சூப்பர்நோவா வெடிப்பானது 40000 ஆண்டுகளுக்கு முன்னதாக நிகழ்திருக்கலாம் என அனுமானிக்கப்பட்டுள்ளது.  3000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது உள்ளது. Image Credit & Copyright: Daniel López (El Cielo de Canarias) / IAC மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் இணையதள முகவரியினைப் பார்வையிடவும் https://apod.nasa.gov/apod/ap170518.html   நடராஜன் அணுவும் தமிழும்

புவியின் வாயுமண்டலமும் பால்வெளி அண்டமும்

Image
புவியின் வாயுமண்டலமும் பால்வெளி அண்டமும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் பூமிக்கு மேலே சுற்றி வருகிறது. பல ஆய்வுகள் இங்கு நிகழ்கிறது. மேலும் புவியில் இருந்து நாம் காணமுடியாத பல அற்புதமான படங்களையும் இதன் மூலமாக நாம் காணப்பெறுகிறோம். இங்கு பூமியின் வளிமண்டலம் மற்றும் பின்புலத்தில் பால்வெளி அண்டத்து நட்சத்திரங்களையும் காணமுடிகிறது. மேலும் தகவல்களுக்கு பால்வெளி மண்டலம் - சர்வதேச விண்வெளி நிலையம் - நாசா - image credit - NASA   நடராஜன் அணுவும் தமிழும்

விசித்திரன் Encleadus

Image
விசித்திரன் encleadus Encleadus சனி கோளின் துணைக்கோள்களில் ஒன்று. மிகவும் விசித்திரமான கோள் ஆகும் அதாவது இக்கோளின் தென்துருவம் மிகவும் வழவழப்பாகவும், இதன் வடதுருவம் கரடுமுரடாகவும் காணப்படுகிறது. வடதுருவம் அதிகமான எரிகற்கள் தாக்குதலுக்கு உள்ளானதை இங்கு காணலாம்.இந்த புகைப்படம் நாசா அனுப்பிய கசினி ஆய்வுக்கலம் மூலம் எடுக்கப்பட்டது. credit : NASA   நடராஜன் அணுவும் தமிழும்

சனிக்கோள்: பூமியில் இருந்து பார்க்க முடியாத புகைப்படம்

Image
சனிக்கோள்: பூமியில் இருந்து பார்க்க முடியாத புகைப்படம். சனிக்கோள் சூரியனில் இருந்து 6 வது சுற்றுப்பாதையில் உள்ளது. சனி கோளை பூமியில் இருந்து தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும்.. எனினும் தொலைநோக்கி வாயிலாக சனியின் பகல் பகுதியை மட்டுமே பார்க்க இயலும். அதன் இரவு பகுதியும் மேலும் அதன் வளையங்களும் பூமியில் இருந்து பார்க்க இயலாத பகுதி ஆகும்.. நாசாவின் கசினி விண்கலம் இந்த புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதிலே சனியில் இரவு பகுதி அற்புதமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் இணைப்பினைக் காணவும்  http://apod.nasa.gov/apod/ap160925.html   நடராஜன் அணுவும் தமிழும்

நிலவின் மறுபக்கம்

Image
நிலா நிலா ஓடி வா.. சிறு வயதில் நம் அனைவரும் தெரிந்த பாட்டு இது. நமக்கெல்லாம் நிலா எப்படி இருக்கும் என்று கேட்டால், தெளிவாக சொல்லி விடுவோம். நிலவை பற்றி சங்க காலம் முதல் சந்திரயான் விண்கலம் வரை பேசுவோம். சரி இப்போது ஒரு கேள்வி.  நாம் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்கிறோம் அல்லவா.. நிலவின் இன்னொரு பக்கத்தை யாராவது பூமியில் இருந்து கண்டதுண்டா..?? பூமியில் இருந்து பார்க்க வாய்ப்பே இல்லை.. நிலவு தனது ஒரு பக்கத்தை மட்டுமே பூமிக்கு எப்போதும் காட்டி வருகிறது. அப்படியானால் நிலவின் மற்றொரு பக்கம் எப்படி இருக்கும்??? அதற்கான தெளிவான படத்தை NASA வெளியிட்டுள்ளது. NASA ஆய்வு மையத்தின் Lunar Reconnaissance Orbiter  என்னும் விண்கலம் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்கிறது. அதன் மூலம் நிலவின் பின்பகுதி , அதாவது பூமியில் இருந்து பார்க்க முடியாத பகுதி இங்கு படத்தில் உள்ளது. நாம் பார்க்கும் நிலவின் ஒரு பகுதி அழகு வாய்ந்ததாக இருக்கும்.. ஆனால் இதற்கு நேர்மாறாக நிலவின் பின்பக்கம் அதிகம் பள்ளங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. இதில் அதிகமாக விண்கற்கள் மோதியிருக்கலாம் என அனுமானிக்கப் படுகிறது. இனிமேல்

புதன் கோளின் மேற்பரப்பு

Image
புதன் கோளின் மேற்பரப்பு: புதன் கோளானது சூரியனின் மிக அருகாமையில் உள்ள கோள் ஆகும். புதனின் மேற்பரப்பானது நமது நிலவின் மேற்பரப்பை ஒத்திருப்பதாக அனுமானிக்கப்படுகிறது. நமது நிலவின் பின்பகுதியில் அதிகமான பள்ளங்கள் , எரிகற்களின் தாக்குதலால் உருவாகியுள்ளன. அதே போல் புதனின் மேற்பரப்பும் அதிகமான எரிகற்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இங்கு உள்ள படம் புதனின் மேற்பரப்பு , NASA   அனுப்பிய  MESSENGER விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட படம் ஆகும்..

சனி கோள் அற்புதமான படம்

Image
சனி கோள் படம் சனி கோள் தன்னைச்சுற்றி வளையங்களைக் கொண்ட அற்புதமான கோள் ஆகும் . இதனை நாசா வின் கசினி விண்கலம் படம் பிடித்து அனுப்பி வருகிறது. ஒவ்வொரு முறையும் சனி கோளின்  நெருக்கமான படத்தினை கசினி அனுப்பி வருகிறது. அவற்றுள் ஒன்றாக சனியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட படம் ஆகும். இதில் சனியின் அற்புதமான வளையங்களும் பின்புலத்தில் காணக்கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும்  இணைப்பினை காணவும். https://apod.nasa.gov/apod/ap170403.html   நடராஜன் natarajanphysicist@gmail.com

சனியின் வளையங்களுக்கு உள்ளே

Image
சனியின் வளையங்களுக்கு உள்ளே... சனி கிரகத்தினை நாசாவின்  கசினி விண்கலமானது சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது. சனியின் வளையங்கள் அதன் மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 2500 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. வளையங்களுக்கும் சனியின் மேற்பரப்பிற்கும் இடையேயான பகுதி வெற்றிடமாகவே உள்ளது. மேலும் இந்த படத்தில் சனியின் மேற்புற துருவ அமைப்பையும் காணலாம். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பைக் காணவும்  https://apod.nasa.gov/apod/ap170430.html   நடராஜன் natarajanphysicist@gmail.com

செவ்வாயின் நிலப்பரப்பு

Image
செவ்வாயின் நிலப்பரப்பு செவ்வாய் கோளின்  நிலப்பரப்பினை நாசாவின் Curiosity ரோபோ ஆய்வு செய்து வருகிறது. அதன் 360° கேமிராவில் எடுக்கப்பட்ட செவ்வாயின் பரந்த நிலப்பரப்பின் தோற்றத்தை இங்கு காணலாம். இந்த நிலப்பரப்பு பல மைல்கள் பரப்பளவு கொண்டதாக உள்ளது. மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பிணைக் காணவும். http://www.nasa.gov/image-feature/jpl/pia11241/panorama-with-active-linear-dune-in-gale-crater-mars Image Credit: NASA/JPL-Caltech/MSSS   நடராஜன். natarajanphysicist@gmail.com

வியாழனின் தென்துருவம்

Image
வியாழனின் தென்துருவம் வியாழன் கோளினை நாசா அனுப்பிய   ஜூனோ ஆய்வுக்கலம் ஆராய்ந்து வருகிறது. அதன் தென்துருவம் இங்கு காணக்கிடைக்கிறது. இது பூமியில் இருந்து காணக்கிடைக்காத தோற்றம் ஆகும். வியாழனின் மிகப்பெரும் புயல்களை இங்கு காணலாம். மேலும் அதிக விவரங்களை கீழ்க்காணும் இணைப்பினில் காணலாம் https://www.nasa.gov/image-feature/jpl/pia21390/approaching-jupiter   நடராஜன் ஸ்ரீதர்

சர்வதேச விண்வெளி நிலைய உயிரினத்துக்கு அப்துல்கலாம் பெயர்

சர்வதேச விண்வெளி நிலைய உயிரினத்துக்கு அப்துல்கலாம் பெயர் சர்வதேச விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே சுற்றி வருகிறது. அதில் சமீபத்தில் ஒரு புதுவகையான நுண்ணுயிர் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு Solibacillus kalamii   என்று பெயரிட்டுள்ளனர் விஞ்ஞானிகள். கலாமி என்பது நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்  அவர்களை நினைவுகூரவே எனவும் விளக்கம் தரப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் அதிக தகவல்களை இந்த இணைப்பில் காணலாம். https://www.ncbi.nlm.nih.gov/pubmed/28475026   நடராஜன் natarajanphysicist@gmail.com