Posts

Showing posts from June, 2020

தமிழில் நல்ல புத்தகங்களைத் தேடிப் படிப்போம் - பாகம் 1

Image
தமிழில் எவ்வளவோ நல்ல புத்தகங்கள் வந்துள்ளன. பல எழுத்தாளர்கள் தமது பங்களிப்புகளைத் தமிழில் செய்து வருகிறார்கள். பல்வேறு தேடல்கள் கொண்ட அறிஞர்கள் தமிழ்ப் புத்தகங்கள் மூலம் பல்வேறு ஆழமான கருத்துக்களை எழுதிவைத்துள்ளனர். அவ்வகையில் தமிழில் அறிவியலைத் தெரிந்துகொள்ள ஏதுவாக உள்ள சில புத்தகங்களைப் பற்றி இந்த தொடரில் எழுத இருக்கிறேன். தமிழில் இயற்கையைப் பற்றியும் வானியலை பற்றியும், பிரபஞ்சத்தின் இயக்கங்களைப் பற்றியும், ஆழமாக சில அறிஞர்கள் எழுதியுள்ளனர். மேலும் பல மேற்கத்திய அறிஞர்களின் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் வைத்துள்ளனர். அவற்றில் ஒன்றாக சமிபத்தில் வெளியான ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் என்ற புத்தகத்தை இங்கு அறிமுகம் செய்கிறேன். இந்தப் புத்தகம் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களால் எழுதப்பட்டது. தமிழில் குமாரசாமி என்பவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் கடவுள் என்ற நிலை  உண்மையிலேயே இருக்க முடியுமா? இந்த பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? எவ்வாறு இயங்கிவருகிறது? மனித இனம் எவ்வாறு தோன்றியது? இந்த பூமியில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றியது? என்பது போன்ற கேள்விகள் குறித்து ஆழமாக

செவித்திறன் குறைபாடுடையோருக்கு உதவக்கூடிய செயலி

Image
செவித்திறன் குறைபாடு உடையோர் படும் இன்னல்கள் சொல்லிமாளாது. அவர்களுக்கு பல்வேறு நவீன கருவிகள் வந்துவிட்டன. பலர் மருத்துவ ஆய்வுகளின் மூலம் தங்களது செவித்திறன் குறைபாடுகளைக் கண்டறிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சைகளோ அல்லது கருவிகளையோ பயன்படுத்தி தங்களது தினசரி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்கின்றனர். சிலர் தங்களுக்கு செவித்திறன் குறைபாடு இருக்கிறது என்பதைக் கூட உணராமல் இருக்கவே செய்கின்றனர். அவர்களுக்கு உதவக் கூடிய வகையில் கூகுள் புரட்சிகரமான ஒரு செயலியை சந்தைப்படுத்தி உள்ளது தங்களின் ஆண்ட்ராய்டு தொலைபேசியில் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் வரக்கூடிய இந்த செயலியின் பெயர் sound amplifier என்பதாகும். இந்த செயலியானது வெளிப்புறத்தில் உள்ள சத்தங்களையும் மற்றும் இரைச்சலையும் போனில் உள்ள மைக் அல்லது ஹெட் போனில் உள்ள மைக் மூலம் ஒலிகளாக பெற்று அவற்றை மேம்படுத்தி காதுகளுக்குள் அனுப்புகிறது . இவ்வாறான சப்தம் உயர்த்தப்பட்ட ஒலியானது  காதுகளுக்குள் வரும்போது ஒரு நபர் தன்னை சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ள முடியும். தங்களுக்கு காது செவித்திறன் குறைவாக உள்ளது என்று சொல்வது சிலருக்கு சங்கோஜமாக இருக்