தமிழில் நல்ல புத்தகங்களைத் தேடிப் படிப்போம் - பாகம் 1



தமிழில் எவ்வளவோ நல்ல புத்தகங்கள் வந்துள்ளன. பல எழுத்தாளர்கள் தமது பங்களிப்புகளைத் தமிழில் செய்து வருகிறார்கள். பல்வேறு தேடல்கள் கொண்ட அறிஞர்கள் தமிழ்ப் புத்தகங்கள் மூலம் பல்வேறு ஆழமான கருத்துக்களை எழுதிவைத்துள்ளனர். அவ்வகையில் தமிழில் அறிவியலைத் தெரிந்துகொள்ள ஏதுவாக உள்ள சில புத்தகங்களைப் பற்றி இந்த தொடரில் எழுத இருக்கிறேன்.

தமிழில் இயற்கையைப் பற்றியும் வானியலை பற்றியும், பிரபஞ்சத்தின் இயக்கங்களைப் பற்றியும், ஆழமாக சில அறிஞர்கள் எழுதியுள்ளனர். மேலும் பல மேற்கத்திய அறிஞர்களின் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் வைத்துள்ளனர். அவற்றில் ஒன்றாக சமிபத்தில் வெளியான ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் என்ற புத்தகத்தை இங்கு அறிமுகம் செய்கிறேன். இந்தப் புத்தகம் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களால் எழுதப்பட்டது. தமிழில் குமாரசாமி என்பவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில் கடவுள் என்ற நிலை  உண்மையிலேயே இருக்க முடியுமா? இந்த பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? எவ்வாறு இயங்கிவருகிறது? மனித இனம் எவ்வாறு தோன்றியது? இந்த பூமியில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றியது? என்பது போன்ற கேள்விகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் புத்தகம் பல்வேறு அறிவியல் தகவல்களை நம் விரல் நுனிகளில் கொண்டு வந்து தருகிறது. அறிவியலை தமிழில் புரிந்து கொள்ள விளையும் நண்பர்களுக்கு இது மிகச் சிறந்த புத்தகம் மேலும் இந்த புத்தகம். இது ஸ்டீபன் ஹாக்கிங் கடைசியாக எழுதிய புத்தகம் என்பது கூடுதல் தகவல்.


இந்த புத்தகம்  அமேசான் மூலம் விலை குறைவாகக் கிடைக்கிறது. அதை இங்கு பெறலாம். 



நமது மாதச் செலவினங்களில் புத்தகத்துக்கும் ஒரு சிறு  தொகை செலவழித்து அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.



Comments

Popular posts from this blog

மைக்கேல் மதன காமராஜன் - எனது பார்வையில் - பாகம் 1

வானியற்பியல் புத்தகம்

ஐசிசி டெஸ்ட் உலகக்கோப்பை ஒரு அலசல்