Posts

Showing posts from June, 2023

வானியற்பியல் புத்தகம்

Image
Astrophysics for People in a Hurry என்ற புத்தகம் (தமிழில் அவசரமாய் செல்வோருக்கு வான இயற்பியல் என்று சொல்லலாம்) இயற்பியலாளர் நீல் டீகிரீஸ் டைசனால் எழுதப்பட்டுள்ளது. புத்தகம் வானியல் குறித்த பல்வேறு விஷயங்களை அலசுகிறது. https://amzn.to/46alMaw காமா கதிர்கள் முதல் ரேடியோ அலைகள் ஈறாக ஒட்டுமொத்த மின்காந்த அலைகளைப் பற்றி மிக விரிவாக விளக்குகிறார் டைசன். எந்தெந்த அலை நீளங்களைக் கொண்டு எந்தெந்த வானியற்பியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்பது குறித்தும் தெளிவுற விளக்குகிறார். உதாரணமாக மைக்ரோ அலைகளைக் கொண்டு பிரபஞ்சத்தின் பின்புல வெப்பநிலையைக் கணக்கிடலாம் என்றும், ரேடியோ அலைகளைக் கொண்டு துடிப்பு விண்மீன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் எனவும் விரிவாக விளக்குகிறார். https://amzn.to/46alMaw  பிரபஞ்சம் தோன்றிய முதல் மூன்று நிமிடங்களில் பிரபஞ்சம் எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பதில் ஆரம்பித்து பூமியின் உருவாக்கம் வரை முதல் இந்நூல் தெளிவாக விளக்குகிறது. முதல் எலக்ட்ரான் தோன்றியதிலிருந்து பிரபஞ்சத்தில் இன்றைய நிலை வரை சற்று விரிவாகவே அலசுகிறது.  https://amzn.to/46alMaw இந்நூல் பூமியைப் ப

ஆஷஸ் தொடரும் ஸ்டீவ் ஸ்மித்தும்

Image
ஆரவாரமான ஆஷஸ் தொடர் நாளை ஆரம்பிக்கிறது.. இதுக்கு முன்னாடி ஒரு சின்ன ப்ளாஸ்பேக்... 2019 இல் இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் நடந்தது. அதுக்கு முன்னாடி இரண்டு வருஷமா ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சந்தித்த தோல்விகள், அவமானங்கள் அதிகம். அணியை வழிநடத்த சிறந்த வீரர்கள் இல்லாதது, அணியின் இரு பெரும் தலைகளான வார்னரும், ஸ்மித்தும் தடையைச் சந்தித்தது ஆகியவை அவர்களை மனதளவில் பெரிதும் பாதித்தது. மேலும் ஆஸ்திரேலியாவின் முக்கிய பலமான அதன் ரசிகர்கள் பட்டாளத்தையும் அந்த அணி கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்கியது. 2017–2019 ஆகிய காலகட்டங்கள் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் கசப்பான அனுபவத்தை தந்தது. தனது சொந்த மண்ணில் இந்தியாவுடன் டெஸ்ட் தொடர் தோல்வி, அதற்கு முன்னர் டெஸ்டில் சரியாக விளையாடாத பாகிஸ்தானிடம் தட்டுத்தடுமாறி தொடரைச் சமன் செய்தது. இங்கிலாந்திடம் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து மண்ணில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. (இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் தனது அதிகபட்சமான ஸ்கோரை இவர்களுடன் பதிவு செய்தது. 481/6).  50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரில் தோல்வியைச் சந்தித்தது. பேட்டிங்கில் சொதப்பல்கள், ஸ்டார்க் போன்ற முன்னணிப் ப

ஐசிசி டெஸ்ட் உலகக்கோப்பை ஒரு அலசல்

Image
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுவிட்டது. இரண்டாவது முறையாக இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் சென்று தோல்வியை பரிசாக பெற்றுத் திரும்பி உள்ளது. ஒரே ஆறுதல் என்னவெனில் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்திக்கவில்லை என்பதுதான். சரி இந்த தோல்விக்குக் காரணம் தான் என்ன? எவ்வாறு சரி செய்வது? இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு போன அணி எந்த விதத்திலும் தயாராகவே இல்லை. குறிப்பாக இந்திய வீரர்கள் ஐபிஎல் மைன்ட் செட்டில் இருந்து வெளிவரவே இல்லை. எப்போதும் டெஸ்ட் போட்டிகளுக்கு மனதளவில் ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராகி வருவார்கள்.  குறிப்பாக அவர்களுக்கு  ஆஷஸ் தொடர் குறித்த மிகப்பெரிய தாகம் இருக்கும். அதன் விளைவாக தற்போது நடந்த பைனலுக்காக அவர்கள் வருவதை விட ஆஷஸ் க்காக தயாராகி வந்தனர். ஆஷஸில் விளையாடும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி மற்ற எந்த டெஸ்ட் அணிகளை விடவும் அசுர பலத்தோடு இருக்கும். இதுவும் ஒரு காரணம் அவர்களை நாம் வீழ்த்த முடியாததற்கு. இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் போட்டியில் நீண்ட நேரம் நிற்க வேண்டும் என்பதை மறந்து விட்டனர் போலும். குறிப்பாக டாப் ஆர்டரில் அவர்