Posts

Showing posts from May, 2023

வானியற்பியல் புத்தகம்

Image
Astrophysics for People in a Hurry என்ற புத்தகம் (தமிழில் அவசரமாய் செல்வோருக்கு வான இயற்பியல் என்று சொல்லலாம்) இயற்பியலாளர் நீல் டீகிரீஸ் டைசனால் எழுதப்பட்டுள்ளது. புத்தகம் வானியல் குறித்த பல்வேறு விஷயங்களை அலசுகிறது. https://amzn.to/46alMaw காமா கதிர்கள் முதல் ரேடியோ அலைகள் ஈறாக ஒட்டுமொத்த மின்காந்த அலைகளைப் பற்றி மிக விரிவாக விளக்குகிறார் டைசன். எந்தெந்த அலை நீளங்களைக் கொண்டு எந்தெந்த வானியற்பியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்பது குறித்தும் தெளிவுற விளக்குகிறார். உதாரணமாக மைக்ரோ அலைகளைக் கொண்டு பிரபஞ்சத்தின் பின்புல வெப்பநிலையைக் கணக்கிடலாம் என்றும், ரேடியோ அலைகளைக் கொண்டு துடிப்பு விண்மீன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் எனவும் விரிவாக விளக்குகிறார். https://amzn.to/46alMaw  பிரபஞ்சம் தோன்றிய முதல் மூன்று நிமிடங்களில் பிரபஞ்சம் எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பதில் ஆரம்பித்து பூமியின் உருவாக்கம் வரை முதல் இந்நூல் தெளிவாக விளக்குகிறது. முதல் எலக்ட்ரான் தோன்றியதிலிருந்து பிரபஞ்சத்தில் இன்றைய நிலை வரை சற்று விரிவாகவே அலசுகிறது.  https://amzn.to/46alMaw இந்நூல் ப...

ஏன் தோனி கொண்டாடப்படுகிறார்?

Image
96-2007 வரை கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு .. இந்திய டீம் ல ஜாம்பவான்களோட காலம்.. சச்சின், கங்குலி, டிராவிட்,சேவாக், ஜாகீர்,கும்ளே, லெட்சுமண்,யுவராஜ் இப்படி பலரும் உலா வந்த காலம். இவ்வளவு இருந்தும் சில குறைகளை இந்திய அணியில் ரசிகர்கள் உணர்ந்தனர். மற்ற அணியில் எல்லாம் விக்கெட் கீப்பர்கள் நல்ல ஹிட்டர்களாகவும், லோவர் மிடில் ஆர்டரில் வந்து கடைசி ஏழு எட்டு ஓவர்களில் ரன் ரேட்டை வேகப்படுத்தி ஸ்கோரை அதிகரிக்கவும் செய்தனர்.   பிரமாதமான கீப்பிங்கில் அவர்களைத் தாண்டி, பெரும்பாலும் பந்து நகராதவாறு அரணாக நின்றனர். உதாரணமாக கில்கிறிஸ்ட், பவுச்சர், சங்க்காரா போன்ற லெஜன்டுகள். இதையெல்லாம்  பார்த்த இந்திய ரசிகர்கள் நமக்கும் இப்படி ஒரு கீப்பர் அமைய மாட்டாரா என்று காத்திருந்தனர். இந்திய அணியும் அதற்கேற்ப மோங்கியா, டிராவிட், பார்த்திவ், கார்த்திக் என்று மாற்றி மாற்றிப் பார்த்தாலும் ஸ்டான்டர்ட் விக்கெட் கீப்பர் ஒருவரை கண்டுபிடிக்க இயலவில்லை.   அப்போதுதான் ஒருவர்  ஹீரோ மாதிரி வந்தார்.. தலை நிறைய முடியுடன் வந்து துடிப்பான விக்கெட் கீப்பராகவும், அதிரடியாக பேட்டிங் ஆடவும் செய்தார...