Posts

Showing posts from March, 2022

மைக்கேல் மதன காமராஜன் எனது பார்வையில் பாகம் 5

Image
மைக்கேல் மதன காமராஜன் பற்றி தொடர் பதிவுகளில் பாகம்-5 இங்கே.. இதன் முந்தைய பாகங்களை இந்த இணைப்பில் காணலாம்.. வழக்கமான காதல் காட்சின்னா பூ ரெண்டு உரசுறாப்ப சீன்இருக்கும்.. அத கலாய்ச்சு ஒரு புரொபோசல் சீன்..😀 அட அவ்வை சண்முகி நாகேஷ் கமல் ரெபரன்ஸ் இங்க ஒரு சீனோட எக்ஸ்டென்சன் தான் போல படம் ஆரம்பத்தில இருந்தே கிளைமாக்ஸ் தான்.. கடைசி 45 நிமிசம் முழு கிளைமேக்ஸ் World Cinema Articles in Tamil இந்த படம் மாதிரி இப்படி சீன் பை சீன் தீவிர ரசனையோட ஒரு படம் எடுக்கறது ரொம்ப கஷ்டம்.. இதை ரீமேக் பண்றதும் ரொம்ப கஷ்டம். இங்க எதுக்கு கமலும் குஷ்புவும் ட்ரெஸ் செலக்சன பத்தி்பேசறாங்கன்னு யோசிச்சா, அடுத்த சீன்ல ட்ரெஸ் கலர் தான் பாட்டும் (பேர் வச்சாலும் பாட்டு) கதையோட ஓட்டமும் தீர்மானிக்கப் போகுது.. ஒவ்வொரு டயலாக்கும் சிரிக்க வைக்குற லெவல்ல ரைட்டிங் கிரேசி மோகன் ராஜூ கமல், குஷ்பு லவ் புரொபொசல் அப்போ கமல் இந்த வீடு என்னோடது இல்லன்னா என்ன விட்டு போயிர மாட்டியேன்னு குஷ்புட்ட கேப்பாரு.. இங்கேயே ரூபினி பத்தி ஹிடன் டீடெயில் வரும்.. (ரூபினி மதன் கமலை பணக்காரன்னு தான் லவ் பண்வாப்ள).. ரொம்ப ரொம்ப தெளிவாக கிளைமாக்ஸ் தவிர

மைக்கேல் மதன காமராஜன் - எனது பார்வையில் பாகம் 4

Image
 நுணுக்கமான டீடெயிலிங்கோட  ஒரு சிறந்த படம்தான் மைக்கேல்  மதனகமராஜன். அந்த படத்தை பற்றி தொடர் பாகங்களாக படித்து வருகிறோம். முதல் பாகம் இணைப்பு  அதன் நான்காம் பாகம் இங்கே பார்க்கலாம். திரிபுரசுந்தரி மற்றும் காமேஸ்வரன் சந்திப்பு  வீட்டில் நிகழும். இதன் நீட்சியாக வரும் சுந்தரி நீயும் பாடலும் வீட்டு உட்பகுதியிலேயே இருக்கும்.  அதாவது பாடலுக்காக மட்டும் கனவு காட்சியாக வெளிநாடுகளுக்கு பறந்து செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இந்த பாடலும் வரும் வண்ணம் ரசிகர்களை கட்டிப்போட்டு மேஜிக் செய்திருக்கிறார்கள்.  கூடவே இசைஞானி இசையும். மலையாள பாணியில், அதுலயும் கமல் தான் பாடுறாரு.  இந்த சண்டைக்காட்சியில் மதன் ரூபினி மற்றும் ராஜு ஆகியோர் ஒரு பொது கழிப்பறையில் நிகழும் சண்டைக்காட்சியில் நடைபெறுகிறது. Learn more interesting facts about tamil Cinema - Cinema Kottagai - Baskaran  இங்கு எப்படி ராஜு வருகிறார் என்ற கேள்விக்கு முன்னமே ராஜூவே சொல்லியிருக்கிறார் தான் ஒரு பகுதிநேர நாடக கலைஞர் என்று. அவரும் ரூபினி பங்குபெற்ற இந்த நாடக மேடைக்கு பகுதிநேர நாடகம் போட வந்திருக்கிறார். அவரே இன்னொரு காட்சியில் சொல்வார் தாங்கள் ப

மைக்கேல் மதன காமராஜன் எனது பார்வையில் பாகம் 3

Image
மைக்கேல் மதன காமராஜன் படம் குறித்து உள்ளார்ந்த பல விஷயங்களை தொடர் பதிவாக பார்க்கிறோம் அதன் பாகம்-3 இந்த பதிவில் பார்க்கலாம்.  முதல் பாகம் இணைப்பு இங்கே இ ரண்டாம் பாகம் இங்கே Tamil Cinema 100 அட இந்த ஷாட்ல பின்னாடி இருக்கிற சாம்பார் பாத்திரத்தில் கமல் கையில் இருந்த சாம்பார் ஊற்றும் பாத்திரம் மூழ்கும். அதாவது தவறுதலாக வந்த  மீன் அந்த சாம்பார் பாத்திரத்தில் விழ இருக்கிறது என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க அந்த காட்சி. மதன் கதாபாத்திரத்தை எங்கே விட்டோம் ஞாபகமிருக்கிறதா ஒரு போன் காட்சி வாயிலாக. அதன் தொடர்ச்சியாக மதன் காதாபாத்திரம் மீண்டும் அறிமுகப்படுத்தும்போது போனில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த ஷாட்ல மதன் கமலுக்கு வரும் தொலைபேசியை நாகேஷ் ஒட்டுக் கேட்பார்.  அதாவது அவர்கள் பேசிக் கொண்டிருக்கக் கூடிய விஷயம் மதன் கமலின் அப்பா இறந்தது பற்றிய விஷயம் என்பது. அது எங்கு நடந்தது ஒரு மலை முகடு அல்லது மலை முகட்டை நோக்கி போகும் பாதை. இதை சொல்லும் வகையில் நாகேஷின் பின்னணியில் ஒரு மலை  புகைப்படம் இருக்கும். மேலும் இந்த கதை அடுத்து யாரை நோக்கி நகர போகிறது என்றால் தீயணைப்பு வீரரான ராஜூவை நோக்கி நகர இருக்கிறது.

மைக்கேல் மதன காம ராஜன் - எனது பார்வையில் பாகம் 2

Image
மைக்கேல் மதன காமராஜன் படம் பற்றிய நுணுக்கமான குறியீடுகள் குறித்து பார்த்து வருகிறோம் அதன் முதல் பாகம் இணைப்பு இங்கே https://atomtamil.blogspot.com/2022/03/mmkr-1.html?m=1  அதன் தொடர்ச்சியான பாகம் 2 இங்கு பேசுவோம்  அதே மாதிரி ஒரு சீனில் இருந்து இன்னொரு சீனுக்கு சிறுசிறு பொருட்கள் வழியாகவும் காட்சிகள் நகர்த்தப்பட்டு இழுக்கும். டிராமாவில் ரூபினியின் கையிலிருந்த ஒரு பொம்மை கத்தி அடுத்த சண்டைக் காட்சிக்கு பிறகு மதன் மற்றும் ராஜூவை இணைக்கும் ஒரு துருப்பு சீட்டாக பயன்படும். அதே போல கமல் குஷ்பூ சந்திக்கும் முதல் இரு காட்சிகள் தண்ணீரை மையமாக வைத்து இருக்கும். குறியீடுல பின்னியிருக்காங்க. அட ராஜூவின் இரண்டு டூயட் காட்சியும் மஞ்சள் உடை.. (ரம்பம்பம் ஆரம்பம், பேர் வச்சாலும் பாடல்)  தீயணைப்பு வீரராம் ராஜூ.. அதனால மஞ்ச சொக்கால டான்ஸ்.. தீயும் நீரும்.. ராஜூவும் குஷ்பூ வுமாம்.. குறியீடு. ஒவ்வொரு காட்சியின் பொருட்கள் தான் அடுத்தடுத்த ஒவ்வொரு காட்சியையும் சம்பந்தப்படுத்தி அதற்கு அடுத்து வரும் காட்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். மதனுக்கும் மைக்கேலுக்கும் சம்பந்தம் பணம். அதனால் மைக்கேலுக்கு  ஆரம்பக

மைக்கேல் மதன காமராஜன் - எனது பார்வையில் - பாகம் 1

Image
தொடர்ச்சியான ஆய்வுகள் செய்து வரும்போது சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும் விதமாக நல்ல இசையைக் கேட்பது அல்லது நல்ல படங்களைப் பார்ப்பது எனது வழக்கம். அப்படி நான் பார்த்து வியந்த ஒரு திரைப்படங்களில் ஒன்று, மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம். அந்த படத்தை பற்றி நான் இங்கு எழுத விழைகிறேன். என்னடா இது அறிவியல் வலைப்பூவில் திடீரென சினிமா எழுதுகிறானே என்று வியக்க வேண்டாம் மக்களே.. இந்த திரைப்படம் பற்றி நீண்ட நாள் எழுதவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அதனால் தான் இந்த வலைப்பூவில் ஒரு திரைப்பட பதிவு. ஒரு  சினிமா ரசிகனாக இப்படத்தில் நான் பார்த்த விஷயங்களை இங்கு பதிவிடுகிறேன். ஒரு நல்ல திரைப்படம் என்ன பண்ணும்... நல்ல ரசிகனை வியந்து பார்க்க வைக்கும். அப்படி ஒரு படம் தான் வெளியாகி,   32 ஆண்டுகள் ஆகியும் கூட இப்போதும் ஃபரெஷ்ஷாக இருக்கும் மைக்கேல் மதன காம ராஜன் படம்.   ரொம்பவே நுணுக்கமாக எடுக்கப்பட்ட மைக்கேல் மதன காமராஜன் படத்தைப் பற்றி நாம் இந்த நீள் பதிவில் காணலாம். இந்த திட்டத்தை பல பேர் பல விதமாக ரசித்த விலகியிருந்தாலும் எனது பார்வையில் தெரிந்த சில விஷயங்களை தொகுத்து எழுதுகிறேன். இந்த படம் 1990 தீப