மைக்கேல் மதன காமராஜன் - எனது பார்வையில் பாகம் 4
நுணுக்கமான டீடெயிலிங்கோட ஒரு சிறந்த படம்தான் மைக்கேல் மதனகமராஜன். அந்த படத்தை பற்றி தொடர் பாகங்களாக படித்து வருகிறோம்.
அதன் நான்காம் பாகம் இங்கே பார்க்கலாம்.
திரிபுரசுந்தரி மற்றும் காமேஸ்வரன் சந்திப்பு வீட்டில் நிகழும். இதன் நீட்சியாக வரும் சுந்தரி நீயும் பாடலும் வீட்டு உட்பகுதியிலேயே இருக்கும்.
அதாவது பாடலுக்காக மட்டும் கனவு காட்சியாக வெளிநாடுகளுக்கு பறந்து செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இந்த பாடலும் வரும் வண்ணம் ரசிகர்களை கட்டிப்போட்டு மேஜிக் செய்திருக்கிறார்கள். கூடவே இசைஞானி இசையும். மலையாள பாணியில், அதுலயும் கமல் தான் பாடுறாரு.
இந்த சண்டைக்காட்சியில் மதன் ரூபினி மற்றும் ராஜு ஆகியோர் ஒரு பொது கழிப்பறையில் நிகழும் சண்டைக்காட்சியில் நடைபெறுகிறது.
இங்கு எப்படி ராஜு வருகிறார் என்ற கேள்விக்கு முன்னமே ராஜூவே சொல்லியிருக்கிறார் தான் ஒரு பகுதிநேர நாடக கலைஞர் என்று. அவரும் ரூபினி பங்குபெற்ற இந்த நாடக மேடைக்கு பகுதிநேர நாடகம் போட வந்திருக்கிறார். அவரே இன்னொரு காட்சியில் சொல்வார் தாங்கள் புரட்சிகரமான நாடகங்கள் போட்டதாக.
ராஜூவும் மதனும் ஆள் மாறாட்டம் செய்ய திட்டமிடும் காட்சியில் பிண்ணனியில் மீசைக்காரர்கள் படங்கள்
அந்த வட்டிக்கடைக்காரன் கீழ விழுந்ததும் அவர் மேல விழும் பேப்பர் Using of cynide in plating industry - act before its too late.
மொத்தம் 4 கமல் ரெபரன்ஸ் கண்ணாடியில
அதையும் பீமே சொல்வாரு.. எனக்கு 4 உருவம் தெரியுது பாஸ்
அட இந்த ட்ராமா ராஜூ தான் அன்பே சிவம் ட்ராமா கமல்.. கமல் தி கிரேட்
மீசையப்பத்தின சீன்ல பிண்ணனியில் உள்ள படத்துல குதிரைக்கு மீசை.. யோவ்
மதனுக்கு கண்ணாடி இல்லாட்டி கண் பார்வை குறை.. அதை டீ கிளாஸ வைக்க தடுமாறுறாப்ள சீன்.. ஐ கிளாஸ் டீ கிளாஸ்😀
அவினாசி - நாகேஷ் சமாதானம் பேசுறாப்ள மதன்ட்ட.. அட அந்த போன் கலரு வெள்ளை..பிண்ணனியில மதன் போட்டோ..
தொடரும்..
இதன் ஐந்தாவது பாகம் விரைவில்
Comments
Post a Comment