மைக்கேல் மதன காமராஜன் - எனது பார்வையில் - பாகம் 1
தொடர்ச்சியான ஆய்வுகள் செய்து வரும்போது சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும் விதமாக நல்ல இசையைக் கேட்பது அல்லது நல்ல படங்களைப் பார்ப்பது எனது வழக்கம். அப்படி நான் பார்த்து வியந்த ஒரு திரைப்படங்களில் ஒன்று, மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம். அந்த படத்தை பற்றி நான் இங்கு எழுத விழைகிறேன். என்னடா இது அறிவியல் வலைப்பூவில் திடீரென சினிமா எழுதுகிறானே என்று வியக்க வேண்டாம் மக்களே.. இந்த திரைப்படம் பற்றி நீண்ட நாள் எழுதவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அதனால் தான் இந்த வலைப்பூவில் ஒரு திரைப்பட பதிவு. ஒரு சினிமா ரசிகனாக இப்படத்தில் நான் பார்த்த விஷயங்களை இங்கு பதிவிடுகிறேன்.
ஒரு நல்ல திரைப்படம் என்ன பண்ணும்... நல்ல ரசிகனை வியந்து பார்க்க வைக்கும். அப்படி ஒரு படம் தான் வெளியாகி, 32 ஆண்டுகள் ஆகியும் கூட இப்போதும் ஃபரெஷ்ஷாக இருக்கும் மைக்கேல் மதன காம ராஜன் படம்.
ரொம்பவே நுணுக்கமாக எடுக்கப்பட்ட மைக்கேல் மதன காமராஜன் படத்தைப் பற்றி நாம் இந்த நீள் பதிவில் காணலாம். இந்த திட்டத்தை பல பேர் பல விதமாக ரசித்த விலகியிருந்தாலும் எனது பார்வையில் தெரிந்த சில விஷயங்களை தொகுத்து எழுதுகிறேன். இந்த படம் 1990 தீபாவளி வெளியீடாக வந்தது. இதில் எனது பார்வைகள்.
அந்த பீரியட்ல போல்டான முயற்சி அது.. முழு நீள காமெடி படம் எடுக்கணும். 4 கேரக்டர் ஹீரோவுக்கு மட்டுமே. அதுபோக ஹீரோயின்கள், எதிர்த்தரப்பு பார்ட்டி, பிளாஷ்பேக், பாடல்கள், ஃபைட்சீன், துணை கேரக்டர்ஸ் இது எல்லாம் சேர்க்கணும். இது எல்லாத்தையும் இரண்டரை மணி நேரத்துக்குள்ள முடிக்கணும். ரசிகர்களுக்கு போர் அடிக்கவும் கூடாது. இவ்வளவு பெரிய சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக வந்த படம்தான் மைக்கேல் மதன காம ராஜன்.
இந்த படத்துல அவ்வளவு நுணுக்கமாக கதை, திரைக்கதை, இசைக் கோர்ப்பு, கேமரா அனைத்திலும் வேலை செஞ்சு இருக்காங்க. கமலோட ஆஸ்தான டீம், சந்தானபாரதி, நாகேஷ், நாசர், டெல்லி கணேஷ், கிரேசி மோகன் இவங்களும் இருக்காங்க
இந்த படத்துல கமலுக்கு நான்கு கதாபாத்திரம். நாலு ஹீரோ இருக்கிறாங்கன்னா, நாலு பேருக்கும் தனித்தனி பிளாஷ்பேக் வச்சாலும் 20 நிமிஷம் இதிலேயே கடக்கும். ஆனா ரொம்ப ஸ்மார்ட்டா அதை ஓபனிங் சீனிலேயே வச்சிருப்பாங்க. இன்னும் நுணுக்கமாக கவனித்தால் அபூர்வ சகோதரர்கள் கதையோட ஒன்லைன் ஓபனிங் பாட்டுலயே ஓடியிருக்கும்.
கேட்ச் மை பாய்ன்ட் அப்படீன்னு அப்பா சொல்ற மாதிரி மதன் மட்டும் சொல்வாப்ள..
ஆனா கூடவே புள்ளளைன்னு சொல்லிக்கிற நாசர் சொல்ல மாட்டாப்ள.. இதுல இருந்தே அப்பாவும் புள்ளையும் எவ்வளவு நெருக்கம் அப்படின்னு புரிஞ்சுக்கலாம்..இயக்குனர் டச் இது.
அப்பாவும் மகனும் புரிதலோட இருந்தாங்கன்னு அவங்க சேர்ந்து இருக்குற போட்டோக்கள் ஹால்ல இருக்காப்ள சீன் இருக்கும்.
அதே சீன்ல
கமல் : கல்யாணம் ஆகீருச்சா
நாகேஷ் : என்ன சார் கல்யாணம் ஆகாம குழந்தைங்க எப்படி
அந்த ஷாட்ல நாகேஷ் உக்காருர நாற்காலிக்கு பின்னாடி கமலும் அவங்க அப்பாவும் இருக்கிற படம் இருக்கும். ( கதைப்படி மதன் கேரக்டர் கமல் அவங்க அப்பாவுக்கு கல்யாணம் ஆகாம பிறந்த பிள்ளை)
மைக்கேல் மற்றும் அவனது அப்பா காரில் தப்பிச் செல்லும்போது அந்த காரில் ஸ்ரீராமஜெயம் என எழுதி இருக்கும்.
அதாவது பலர் ஆபத்து காலத்தில் அல்லது பயத்தில் ஸ்ரீராமஜெயம் என எழுதுவதற்கு உச்சரிப்பது பார்த்திருப்போம். இதை குறிக்கும் வகையில் அந்த காட்சி. எனினும் அவர்கள் போலீசாரால் சுற்றி வளைகப்படுவதாகவும் காட்சி இருக்கும்.
மைக்கேல் தப்பிக்கும் காட்சியில் ஒரு தீ விபத்தும் மைக்கேல் காட்சி முடிந்து ராஜூ காட்சி ஆரம்பிக்கும் இடம் ஒரு தீ விபத்தாய் இருக்கும்.
தொடர்ச்சியான இருவேறு நிகழ்வுகள் ஒன்றாய் பின்னப்பட்டிருக்கும். அதாவது மைக்கேல் அந்த தீவிபத்து முடிவில் தொடர்ந்து ஒரு காரில் சென்று ஒரு இடத்தில் மோதி மற்றொரு தீ விபத்து ஏற்படுத்துவார். அந்தத் தீ விபத்தில் தான் ராஜூவின் அறிமுகம்.
தீயில் மாட்டிய ஓவியத்தை கமல் காப்பாத்துர சீன்.. அந்த இடத்துல " தீயில மாட்டீருச்சு ஓவியம்,இனி அந்த ஓவியத்தை என்னத்தய்யா காப்பாத்துன, கிழிஞ்சது போ" அப்படீன்னு ஆடியன்ஸ் சொல்வாங்கன்னு புரிஞ்சுருக்கும் போல ரைட்டருக்கு..
அந்த சீன்ல அந்த ஓவிங்கள் கீழ நிக்குற குஷ்பு மீது விழுந்து கிழியும்.. யப்பா.. செம ரைட்டப் கமல்.
தொடரும் ...
பாகம் 2 விரைவில்
----
"32 ஆண்டுகள் ஆகியும் கூட இப்போதும் ஃபரெஷ்ஷாக இருக்கும் மைக்கேல் மதன காம ராஜன் படம்."
ReplyDeleteExcellent writing. I enjoy watching this movie.
Thanks for the comments
DeleteWhat a movie by Kamal sir
ReplyDeleteEvery time we watch we find new things. So much detailing in Kamal movies
ReplyDeleteதமிழ்ப் பதிவுலகமே வறண்டு போய் விட்ட இக்காலத்திலும் தொடர்ச்சியாக இயங்கி வரும் ஒரு தளத்தைப் பார்ப்பது குறித்து முதலில் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ReplyDelete‘மைக்கேல் மதன காம ராசன்’ தமிழின் முக்கியமான படங்களில் ஒன்று! இதற்குப் பல ஆண்டுகள் முன்பே சிவாசி கணேசன் அவர்கள் ‘நவராத்திரி’யில் ஒன்பது தோற்றங்களில் நடித்திருந்தாலும் அவையெல்லாம் சிறிது நிமையங்கள் மட்டுமே வரக்கூடியவை. ஆனால் படம் முழுக்க இடம் பெறும் வகையில் நான்கு தோற்றங்களில் கலைஞானி இந்தப் படத்தில் காட்டிய திறம் தலைவணக்கத்துக்கு உரியது. இந்தப் படம் வந்தபொழுது எனக்கு 6 வயது. திரையரங்குக்குச் சென்று இந்தப் படத்தை அம்மா, அப்பா, தம்பியுடன் பார்த்த நினைவு பசுமையாக இருக்கிறது. அதன் பிறகும் ஏராளமான முறை தொலைக்காட்சியில் பார்த்து விட்டேன். ஆனாலும் நீங்கள் சொல்லும் அளவுக்கு இவ்வளவு நுட்பமாக நான் கவனிக்கவில்லைதான். ஆனால் என்னளவிலேயே இந்தப் படத்தைப் பற்றிப் பேசத் தகவல்கள் நிறைய உண்டு. முக்கியமாக இந்தப் படத்தின் தொடக்கத்தில் வரும் பாட்டு! படத்தின் ஆக்குநர் பஞ்சு அருணாசலம் அவர்கள் பாடி, ஆடிக் காட்டுவார். நான்கு குழந்தைகள் ஒரே பேற்றில் பிறந்தது, சித்தப்பாவால் அவர்கள் பிரிக்கப்பட்டது, பிரிந்த பின் கைமாறிய விதம் என அந்தப் பாட்டிலேயே படத்தின் முன்கதை சொல்லப்பட்டு விடும். இதனால் படம் பார்க்கும் நமக்குப் படம் உண்மையாகத் தொடங்கும் இடத்தில் - அதாவது மதன் வந்து இறங்கும் காட்சியில் - ஒரு படத்தின் இரண்டாவது பாகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு கிடைக்கும். இது திட்டமிட்டுச் செய்யப்பட்டதா அல்லது படம் முழுக்க எடுக்கப்பட்ட பிறகு நீளத்தைக் குறைக்க வேண்டிச் செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால் இது அற்புதமாக இருக்கும்! ஒரே படத்தில் இரண்டு படம் பார்த்தது போன்ற ஒரு நிறைவு கிடைக்கும்! மிகச் சிறப்பான படம் இது!
மற்றபடி நீங்கள் இந்தத் தளத்தில் அறிவியல் பற்றி நிறைய எழுதி வைத்திருப்பதைப் பார்த்து வியக்கிறேன்! இப்படிப்பட்ட முயற்சிகள் தமிழில் குறைவே! தொடருங்கள்! தொடர்கிறேன்.
தங்களின் கருத்துகளுக்கு நன்றி ஐயா.. தொடர்ந்து எழுமுகிறேன்
Delete