ஐசிசி டெஸ்ட் உலகக்கோப்பை ஒரு அலசல்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுவிட்டது. இரண்டாவது முறையாக இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் சென்று தோல்வியை பரிசாக பெற்றுத் திரும்பி உள்ளது. ஒரே ஆறுதல் என்னவெனில் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்திக்கவில்லை என்பதுதான்.

சரி இந்த தோல்விக்குக் காரணம் தான் என்ன? எவ்வாறு சரி செய்வது?

இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு போன அணி எந்த விதத்திலும் தயாராகவே இல்லை. குறிப்பாக இந்திய வீரர்கள் ஐபிஎல் மைன்ட் செட்டில் இருந்து வெளிவரவே இல்லை.

எப்போதும் டெஸ்ட் போட்டிகளுக்கு மனதளவில் ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராகி வருவார்கள்.  குறிப்பாக அவர்களுக்கு  ஆஷஸ் தொடர் குறித்த மிகப்பெரிய தாகம் இருக்கும். அதன் விளைவாக தற்போது நடந்த பைனலுக்காக அவர்கள் வருவதை விட ஆஷஸ் க்காக தயாராகி வந்தனர். ஆஷஸில் விளையாடும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி மற்ற எந்த டெஸ்ட் அணிகளை விடவும் அசுர பலத்தோடு இருக்கும். இதுவும் ஒரு காரணம் அவர்களை நாம் வீழ்த்த முடியாததற்கு.


இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் போட்டியில் நீண்ட நேரம் நிற்க வேண்டும் என்பதை மறந்து விட்டனர் போலும். குறிப்பாக டாப் ஆர்டரில் அவர்களிடம் மிகவும் அவசரம் தெரிந்தது. @adivj அவர்கள் சொன்னது போல ரோஹித் ஆடிய ஸ்வீப்,  புஜாரா ஆட முயன்ற அப்பர்க்கட், கோலி ஆட முயன்ற   அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்து இதெல்லாம் எந்த விதத்திலும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஒத்து வராது.



அவர்களின் மிக முக்கியமான இரண்டு தூண்களான லபுசேன் ஸ்மித் ஆகியோருக்கு அஸ்வின் பந்து வீச்சில் வீக்னஸ் இருந்தும், அஸ்வினை சேர்க்காதது, விக்கெட்டின் கண்டிஷனைப் புரிந்து கொள்ளாமல் டாஸ் வென்று இங்கு பில்டிங் தேர்வு செய்தது, கடைசி இன்னிங்ஸ சேசிங்கின் போது பொறுமை இல்லாமல் ஆடியது, அணியில் ஒரே ஒரு இடது கை பேட்ஸ்மேனை வைத்துக் கொண்டு ஆடியது, இவையெல்லாம் வெளிப்படையாகத் தெரியும் தோல்விக்கான காரணங்கள்.


இவற்றை சரி செய்ய, டெஸ்ட்க்கென தனியாக ஒரு டீமை உருவாக்க வேண்டும். மேலும் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரஞ்சி தொடர்களில் அதிகம் விளையாட வேண்டும்.  மேலும் கவுன்டி கிரிக்கெட் போல டெஸ்ட்டுக்கான ஒரு பிரீமியர் லீக் ஏற்படுத்தி, ஐபிஎல் போன்று பிரபலப்படுத்த வேண்டும். இவையெல்லாம் இருந்தால் அடுத்த பைனலில் தோற்காமல் விளையாட முடியும்.


இந்த சிறப்பான வெற்றியைப் பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்


Comments

Popular posts from this blog

ஆஷஸ் தொடரும் ஸ்டீவ் ஸ்மித்தும்

வானியற்பியல் புத்தகம்