வானியற்பியல் புத்தகம்
Astrophysics for People in a Hurry என்ற புத்தகம் (தமிழில் அவசரமாய் செல்வோருக்கு வான இயற்பியல் என்று சொல்லலாம்) இயற்பியலாளர் நீல் டீகிரீஸ் டைசனால் எழுதப்பட்டுள்ளது. புத்தகம் வானியல் குறித்த பல்வேறு விஷயங்களை அலசுகிறது.
காமா கதிர்கள் முதல் ரேடியோ அலைகள் ஈறாக ஒட்டுமொத்த மின்காந்த அலைகளைப் பற்றி மிக விரிவாக விளக்குகிறார் டைசன். எந்தெந்த அலை நீளங்களைக் கொண்டு எந்தெந்த வானியற்பியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்பது குறித்தும் தெளிவுற விளக்குகிறார்.
உதாரணமாக மைக்ரோ அலைகளைக் கொண்டு பிரபஞ்சத்தின் பின்புல வெப்பநிலையைக் கணக்கிடலாம் என்றும், ரேடியோ அலைகளைக் கொண்டு துடிப்பு விண்மீன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் எனவும் விரிவாக விளக்குகிறார்.
பிரபஞ்சம் தோன்றிய முதல் மூன்று நிமிடங்களில் பிரபஞ்சம் எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பதில் ஆரம்பித்து பூமியின் உருவாக்கம் வரை முதல் இந்நூல் தெளிவாக விளக்குகிறது. முதல் எலக்ட்ரான் தோன்றியதிலிருந்து பிரபஞ்சத்தில் இன்றைய நிலை வரை சற்று விரிவாகவே அலசுகிறது.
இந்நூல் பூமியைப் பற்றி விளக்குகிறது. பூமியில் உள்ள சிறப்புமிக்கத் தனிமங்கள் மற்றும் பூமியிலிருந்து நாம் செய்த சாதனைகள், விண்வெளிப் பயணத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து விவரிக்கிறார் டைசன்.
மேலும் நட்சத்திரக் கூட்டங்களின் இயக்கங்கள் பற்றியும் மற்றும் அவற்றின் வடிவங்கள் பற்றியும் தெளிவாக அந்தந்த அத்தியாயத்தில் விளக்குகிறார்.
பிரபஞ்ச பின்புல வெப்ப நிலையைக் கண்டறிய செய்யப்பட்ட ஆய்வில் ஆரம்பகட்டத்தில் நிகழ்ந்த பல சுவாரஸ்ய நிகழ்வுகளை இந்நூல் விரிவாக விவரிக்கிறது.
ஒன்று தெரியுமா நீல் டிகிரீஸ் டைசனின் பெயரில் எரிகல் ஒன்று உள்ளது. 2000மாவது ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு எரிகல்லுக்கு 13123-டைசன் என்று நீல் டிகிரீஸ் டைசனின் பெருமைகளைப் பறைசாற்றும் விதமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த அற்புதமான புத்தகம் அறிவியலை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளவும் மற்றும் பிரபஞ்சவியலின் வரலாற்றைப் புரிந்துகொள்ளவும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். வாங்கிப் படித்துப் பயன்பெறுங்கள்.
நம்மகிட்டயும் தமிழ்ல " பிரபஞ்சத்திற்குள் ஒரு சுற்றுலா" அப்படின்னு ஒரு புத்தகம் இருக்கு. தமிழில் விண்வெளியை பற்றி சுருக்க அறிமுகம் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. விருப்பம் இருந்தா அதையும் படிச்சு பாருங்க மக்களே
Natarajan Shriethar
Comments
Post a Comment