மைக்கேல் மதன காமராஜன் எனது பார்வையில் பாகம் 5
மைக்கேல் மதன காமராஜன் பற்றி தொடர் பதிவுகளில் பாகம்-5 இங்கே.. இதன் முந்தைய பாகங்களை இந்த இணைப்பில் காணலாம்..
வழக்கமான காதல் காட்சின்னா பூ ரெண்டு உரசுறாப்ப சீன்இருக்கும்.. அத கலாய்ச்சு ஒரு புரொபோசல் சீன்..😀
அட அவ்வை சண்முகி நாகேஷ் கமல் ரெபரன்ஸ் இங்க ஒரு சீனோட எக்ஸ்டென்சன் தான் போல
படம் ஆரம்பத்தில இருந்தே கிளைமாக்ஸ் தான்.. கடைசி 45 நிமிசம் முழு கிளைமேக்ஸ்
இந்த படம் மாதிரி இப்படி சீன் பை சீன் தீவிர ரசனையோட ஒரு படம் எடுக்கறது ரொம்ப கஷ்டம்.. இதை ரீமேக் பண்றதும் ரொம்ப கஷ்டம்.
இங்க எதுக்கு கமலும் குஷ்புவும் ட்ரெஸ் செலக்சன பத்தி்பேசறாங்கன்னு யோசிச்சா, அடுத்த சீன்ல ட்ரெஸ் கலர் தான் பாட்டும் (பேர் வச்சாலும் பாட்டு) கதையோட ஓட்டமும் தீர்மானிக்கப் போகுது..
ஒவ்வொரு டயலாக்கும் சிரிக்க வைக்குற லெவல்ல ரைட்டிங் கிரேசி மோகன்
ராஜூ கமல், குஷ்பு லவ் புரொபொசல் அப்போ கமல் இந்த வீடு என்னோடது இல்லன்னா என்ன விட்டு போயிர மாட்டியேன்னு குஷ்புட்ட கேப்பாரு.. இங்கேயே ரூபினி பத்தி ஹிடன் டீடெயில் வரும்.. (ரூபினி மதன் கமலை பணக்காரன்னு தான் லவ் பண்வாப்ள)..
ரொம்ப ரொம்ப தெளிவாக கிளைமாக்ஸ் தவிர வேறு எங்கேயும் ரூபினி என்ற ஜக்குபாயும், ராஜு என்ற கமலும் மீது க்ளைமேக்ஸ் தவிர வேறு எந்த இடத்திலும் சந்திக்காமல் சீன்கள் வைக்கப்பட்டு இருக்கும்.
இவ்வளவு சென்டிமென்ட் சீன்கள் இருக்கிறதுக்கு வாய்ப்பு இருந்தும், சோக கிளைமாக்ஸ் வைக்க வாய்ப்பு இருந்தும் அவை எதற்கும் வாய்ப்பு கொடுக்காமல் ரொம்ப அழகா காமெடி படத்தை சுமூகமாக காமெடியாகவே அனைவரும் ஒன்று சேரும் வண்ணம் முடித்து வைத்திருப்பார்கள்.
அனைத்து குழப்பமும் தீர்ந்து படம் ஒரு வழியா சுமூகமா முடியுது...
மீண்டும் ரீமேக் பண்ண முடியாத ஒரு சிறப்பான திரைக்காவியம் தான் மைக்கேல் மதன காமராஜன். இவ்வளவு நுணுக்கமான டீடெயிலிங் மற்றும் மெடஃபோர்களை உள்ளே வைத்து ஒரு கதை அமைப்பதும் மற்றும் படம் பார்க்கும்போதே அவற்றையெல்லாம் புரிய வைப்பதும் இன்றைய சூழலில் மிகவும் கடினமான ஒன்றுதான்.
முற்றும்.
இந்த பதிவில் நான் இப்படத்தின் காட்சி அமைப்புகளை மட்டுமே பேசி இருக்கிறேன். நான் பார்த்த எனது பார்வையில் பல விஷயங்களை நான் தவற விட்டிருக்கலாம். மேலும் இந்த படத்தில் உள்ள இசைக்கோர்ப்பு பின்னணி இசை மற்றும் பல நுணுக்கமான தகவல்கள் ஆகியவற்றை பற்றி பலர் எழுதலாம். அப்படி யாருமே எழுதினால் natarajanarticles@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எனக்கு தகவல் தெரிவித்தால் நானும் படித்து மகிழ்வேன் . மற்றொரு பதிவில் சந்திப்போம்
நடராஜன் ஸ்ரீதர்
Comments
Post a Comment