மைக்கேல் மதன காம ராஜன் - எனது பார்வையில் பாகம் 2
மைக்கேல் மதன காமராஜன் படம் பற்றிய நுணுக்கமான குறியீடுகள் குறித்து பார்த்து வருகிறோம் அதன் முதல் பாகம் இணைப்பு இங்கே
அதன் தொடர்ச்சியான பாகம் 2 இங்கு பேசுவோம்
அதே மாதிரி ஒரு சீனில் இருந்து இன்னொரு சீனுக்கு சிறுசிறு பொருட்கள் வழியாகவும் காட்சிகள் நகர்த்தப்பட்டு இழுக்கும். டிராமாவில் ரூபினியின் கையிலிருந்த ஒரு பொம்மை கத்தி அடுத்த சண்டைக் காட்சிக்கு பிறகு மதன் மற்றும் ராஜூவை இணைக்கும் ஒரு துருப்பு சீட்டாக பயன்படும்.
அதே போல கமல் குஷ்பூ சந்திக்கும் முதல் இரு காட்சிகள் தண்ணீரை மையமாக வைத்து இருக்கும். குறியீடுல பின்னியிருக்காங்க.
அட ராஜூவின் இரண்டு டூயட் காட்சியும் மஞ்சள் உடை.. (ரம்பம்பம் ஆரம்பம், பேர் வச்சாலும் பாடல்)
தீயணைப்பு வீரராம் ராஜூ.. அதனால மஞ்ச சொக்கால டான்ஸ்.. தீயும் நீரும்.. ராஜூவும் குஷ்பூ வுமாம்.. குறியீடு.
ஒவ்வொரு காட்சியின் பொருட்கள் தான் அடுத்தடுத்த ஒவ்வொரு காட்சியையும் சம்பந்தப்படுத்தி அதற்கு அடுத்து வரும் காட்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.
மதனுக்கும் மைக்கேலுக்கும் சம்பந்தம் பணம். அதனால் மைக்கேலுக்கு ஆரம்பக் காட்சி அவனின் தொழிலான கள்ளப்பணத்தில். பணம் என்ற பொருள் காட்டப்பட்டிருக்கும்.
மைக்கேலுக்கு ராஜுவுக்கும் சம்பந்தம் தீ விபத்து. அதாவது ராஜுவின் தொழில் தீயணைப்பாளர். தீ விபத்து இன்று பொருளாக காட்டப்பட்டிருக்கும். ராஜுவுக்கும் காமுவுக்கு சம்பந்தம் காமுவின் சம்பந்தமான தொழிலான சமையல். அதாவது சமைக்கும் பொருள் மீன். அதில் இருந்து காமுவின் காட்சி ஆரம்பிக்கிறது.
ராஜுவுக்கும் குஷ்புவுக்கும் இடையில் அவர்கள் இருவரும் தொழிலான தீயணைப்பு மற்றும் ஆர்ட் ஆகியவை சம்பந்தப்பட்டு இருக்கும். மேலும் அவர்கள் இருவரையும் தொடர்பு படுத்தவும் மேலும் அவர்களுக்குள் காதல் இருக்கிறது என்பதையும் வலுசேர்க்கும் விதமாக ராஜு சொல்வார் நானும் ஆர்டிஸ்ட் தான். டிராமா ஆர்டிஸ்ட் என்பார்.
இந்த தியரியின் அடிப்படையில் பார்க்கும்போது ராஜூவுக்கு ஏற்கனவே ரூபிணியே தெரிந்திருந்தாலும் ரூபினி மதனை பின்னர் காதலிக்கிறாள் என்பது கூட பின்னணி கதையாக இருக்கலாம்.
கள்ளப்பணம், தீவிபத்து, ஆர்ட் , தண்ணீர், ட்ராமா கத்தி, கார் என ஒவ்வொரு காட்சிகளும் பொருட்களின் உதவி கொண்டு நகர்கிறது.
மதன் கமலின் அம்மா வரும் காட்சிகளில் எல்லாம் கார் அல்லது கார் விபத்து சம்பந்தமான காட்சிகள் இருக்கும் இது நேரடியாக அல்லாமல் மறைமுகமாக கமலின் அப்பா கார் விபத்து காரணமாக அந்த அம்மாவுடன் இருக்கிறார் என்பதை திரும்பத் திரும்ப காட்சி அமைப்பை காட்டும்.
தொடரும்.
பாகம்-3 விரைவில்
S.Natarajan
Comments
Post a Comment