மைக்கேல் மதன காமராஜன் எனது பார்வையில் பாகம் 3

மைக்கேல் மதன காமராஜன் படம் குறித்து உள்ளார்ந்த பல விஷயங்களை தொடர் பதிவாக பார்க்கிறோம் அதன் பாகம்-3 இந்த பதிவில் பார்க்கலாம். 
அட இந்த ஷாட்ல பின்னாடி இருக்கிற சாம்பார் பாத்திரத்தில் கமல் கையில் இருந்த சாம்பார் ஊற்றும் பாத்திரம் மூழ்கும். அதாவது தவறுதலாக வந்த  மீன் அந்த சாம்பார் பாத்திரத்தில் விழ இருக்கிறது என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க அந்த காட்சி.




மதன் கதாபாத்திரத்தை எங்கே விட்டோம் ஞாபகமிருக்கிறதா ஒரு போன் காட்சி வாயிலாக. அதன் தொடர்ச்சியாக மதன் காதாபாத்திரம் மீண்டும் அறிமுகப்படுத்தும்போது போனில் இருந்து ஆரம்பிக்கிறது.





இந்த ஷாட்ல மதன் கமலுக்கு வரும் தொலைபேசியை நாகேஷ் ஒட்டுக் கேட்பார். 



அதாவது அவர்கள் பேசிக் கொண்டிருக்கக் கூடிய விஷயம் மதன் கமலின் அப்பா இறந்தது பற்றிய விஷயம் என்பது. அது எங்கு நடந்தது ஒரு மலை முகடு அல்லது மலை முகட்டை நோக்கி போகும் பாதை. இதை சொல்லும் வகையில் நாகேஷின் பின்னணியில் ஒரு மலை  புகைப்படம் இருக்கும். மேலும் இந்த கதை அடுத்து யாரை நோக்கி நகர போகிறது என்றால் தீயணைப்பு வீரரான ராஜூவை நோக்கி நகர இருக்கிறது. அதற்காக சம்பந்தமான இரண்டு விளக்குகளையும் பின்னணியில் வைத்திருப்பார் டைரக்டர். 
மலைமுகட்டில் ராஜு சம்பந்தப்பட்ட தீ மற்றும் மதன் இவர்களுக்கு என்ன சம்பந்தம் இதற்கும் ஒரு பாணி  வைக்கிறார்கள் அது என்னவென்று அடுத்து பார்ப்போம்.


  நான்கு கமலையும் ஒரு நாற்சந்தியில் தவறவிடும் அடியாட்கள்.

ட்ராமாவில் ராஜூவும் ரூபினியும் ஏற்கனவே காதலித்து அல்லது காதல் சொல்லி பணம் வசதி இன்மையால் தோற்ற காதலாய் இருக்கலாம். அதைத்தான் குஷ்புவுடன் லவ் ப்ரோபசலில் லவ் சொல்லீட்டதும் போயிர மாட்டியே என ராஜூ கேட்பது. ( ஒரு வேளை அபூர்வ சகோதரர்கள் ரெபரன்சாக கூட இருக்கலாம்.)




 இந்த சீன்லயும் இதற்கு அடுத்த சூழ்நிலையும் ஒரு பொருளாக சிவப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கும் நாகேஷ் பயன்படுத்தும் மற்றும் நாகேஷ் நாசர் சந்திக்கும் டேபிளில் உள்ள சிவப்பு ரோஜா அதாவது அபாயம் எதிரிகளுக்கு என்பதை உணர்த்தும் காட்சி


தொடரும்..
World cinema Cinema 100

 இந்த சுவாரசியமான தொடரின் அடுத்த பாகம் விரைவில்

நடராஜன் ஸ்ரீதர்

Comments

Popular posts from this blog

மைக்கேல் மதன காமராஜன் - எனது பார்வையில் - பாகம் 1

வானியற்பியல் புத்தகம்

ஐசிசி டெஸ்ட் உலகக்கோப்பை ஒரு அலசல்