ஏன் தோனி கொண்டாடப்படுகிறார்?


96-2007 வரை கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு ..

இந்திய டீம் ல ஜாம்பவான்களோட காலம்.. சச்சின், கங்குலி, டிராவிட்,சேவாக், ஜாகீர்,கும்ளே, லெட்சுமண்,யுவராஜ் இப்படி பலரும் உலா வந்த காலம். இவ்வளவு இருந்தும் சில குறைகளை இந்திய அணியில் ரசிகர்கள் உணர்ந்தனர்.


மற்ற அணியில் எல்லாம் விக்கெட் கீப்பர்கள் நல்ல ஹிட்டர்களாகவும், லோவர் மிடில் ஆர்டரில் வந்து கடைசி ஏழு எட்டு ஓவர்களில் ரன் ரேட்டை வேகப்படுத்தி ஸ்கோரை அதிகரிக்கவும் செய்தனர்.   பிரமாதமான கீப்பிங்கில் அவர்களைத் தாண்டி, பெரும்பாலும் பந்து நகராதவாறு அரணாக நின்றனர். உதாரணமாக கில்கிறிஸ்ட், பவுச்சர், சங்க்காரா போன்ற லெஜன்டுகள்.
இதையெல்லாம்  பார்த்த இந்திய ரசிகர்கள் நமக்கும் இப்படி ஒரு கீப்பர் அமைய மாட்டாரா என்று காத்திருந்தனர். இந்திய அணியும் அதற்கேற்ப மோங்கியா, டிராவிட், பார்த்திவ், கார்த்திக் என்று மாற்றி மாற்றிப் பார்த்தாலும் ஸ்டான்டர்ட் விக்கெட் கீப்பர் ஒருவரை கண்டுபிடிக்க இயலவில்லை. 

 அப்போதுதான் ஒருவர்  ஹீரோ மாதிரி வந்தார்.. தலை நிறைய முடியுடன் வந்து துடிப்பான விக்கெட் கீப்பராகவும், அதிரடியாக பேட்டிங் ஆடவும் செய்தார்.  
அவர் தான் மகேந்திரசிங் தோனி.
பறந்து பறந்து கீப்பிங் செய்து பல இந்திய ரசிகர்களின் கனவு விக்கெட் கீப்பர் ஏக்கத்தை பூர்த்தி செய்தார். 

அங்கிருந்து கேப்டன் ஆனார். பல கோப்பைகளை கொண்டு வந்தார். மற்றும் பல சாதனைகளை செய்தார்.



90களில் இறுதியில் கிரிக்கெட் பார்த்த ரசிகர்களின் அத்தகைய கனவு விக்கெட் கீப்பர் ஏக்கத்தை தீர்த்து வைத்த விளைவுதான் என்றும் அந்த லெஜெண்டை கொண்டாட காரணம்..


அவர் பேருக்குள்ள காந்தம் உண்டு உண்மை தானடா
மஹி பாய்🔥🔥















அணுவும் தமிழும் atomtamil.blogspot.com

Comments

Popular posts from this blog

மைக்கேல் மதன காமராஜன் - எனது பார்வையில் - பாகம் 1

வானியற்பியல் புத்தகம்

ஐசிசி டெஸ்ட் உலகக்கோப்பை ஒரு அலசல்