ஆஷஸ் தொடரும் ஸ்டீவ் ஸ்மித்தும்



ஆரவாரமான ஆஷஸ் தொடர் நாளை ஆரம்பிக்கிறது.. இதுக்கு முன்னாடி ஒரு சின்ன ப்ளாஸ்பேக்...

2019 இல் இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் நடந்தது. அதுக்கு முன்னாடி இரண்டு வருஷமா ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சந்தித்த தோல்விகள், அவமானங்கள் அதிகம். அணியை வழிநடத்த சிறந்த வீரர்கள் இல்லாதது, அணியின் இரு பெரும் தலைகளான வார்னரும், ஸ்மித்தும் தடையைச் சந்தித்தது ஆகியவை அவர்களை மனதளவில் பெரிதும் பாதித்தது. மேலும் ஆஸ்திரேலியாவின் முக்கிய பலமான அதன் ரசிகர்கள் பட்டாளத்தையும் அந்த அணி கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்கியது.
2017–2019 ஆகிய காலகட்டங்கள் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் கசப்பான அனுபவத்தை தந்தது.
தனது சொந்த மண்ணில் இந்தியாவுடன் டெஸ்ட் தொடர் தோல்வி, அதற்கு முன்னர் டெஸ்டில் சரியாக விளையாடாத பாகிஸ்தானிடம் தட்டுத்தடுமாறி தொடரைச் சமன் செய்தது.
இங்கிலாந்திடம் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து மண்ணில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. (இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் தனது அதிகபட்சமான ஸ்கோரை இவர்களுடன் பதிவு செய்தது. 481/6). 



50 ஓவர்
உலகக்கோப்பைத் தொடரில் தோல்வியைச் சந்தித்தது. பேட்டிங்கில் சொதப்பல்கள், ஸ்டார்க் போன்ற முன்னணிப் பந்துவீச்சாளர்கள் காயத்தை சந்தித்தல், என்று ஆஸ்திரேலியா அணி தனது வரலாற்றில் மோசமான பக்கங்களில் இருந்தது.


அந்த நிலையில்தான் வந்தது இங்கிலாந்தில் 2019 ஆஷஸ் தொடர்.
ஒரு வருடத் தடை முடிந்து, மீடியா மக்களின் கேலிப் பேச்சுக்களையும் அவமானங்களையும் தாண்டி டெஸ்ட் போட்டிகளில் முதல் முதலில் அந்த 2019 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் களம் இறங்கினார்  ஸ்டீவன் ஸ்மித். ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்டில்
அவர்களது பரம எதிரியான இங்கிலாந்தை அவர்களது மண்ணிலேயே எதிர்த்து விளையாடும் ஆஷஸ் தொடர். ஆஷஸ் தொடரினை இங்கிலாந்தில் வெல்ல
இங்கிலாந்து எப்போதும் அனைத்து விதத்திலும் முயற்சிகளைச் செய்யும்.

 

  மேலும் ஆஸி அப்போது மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாகள். எளிதாக இந்த தொடரை வென்றுவிட நினைத்த இங்கிலாந்து பல்வேறு திட்டங்களை வகுத்தது.  மேலும்  தனது ரசிகர்கள் மூலம் ஸ்மித் மீது மனதளவில் தாக்குதலைத் தொடங்கியது.



இதையெல்லாம் தாண்டி ஸ்டீவன் ஸ்மித் இறங்கி விளையாடிய (கதகளி ஆடிய) டெஸ்ட் தொடர் அதுவாக அமைந்தது.

ஒவ்வொரு ஆட்டத்திலும் மனுஷன் அனல் பறக்க விட்டாரு ஸ்டீவ் ஸ்மித். ஒரு வருஷமா கிரிக்கெட் விளையாடாம , வெறித்தனமா டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிச்சு பயிற்சி செஞ்சிருந்திருப்பார் போல.. அவ்வளவு ஆக்ரோஷம் அவரோட ஆட்டத்தில்..




அந்த மனுஷன இங்கிலாந்து பவுலர்கள் கட்டுப்படுத்தவே முடியல. அந்த தொடரில் அதிகபட்ச ரன்களையும் மற்றும் 3 சதங்களையும் , 3 அரை சதங்களையும் கொண்டிருந்தார். அந்தத் தொடரில் அவர் விளையாடிய 4 போட்டிகளில் 774 ரன்களை சராசரியாக 110 என்ற நிலையில் கொண்டிருந்தார்.



ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை ஒரே ஆளாக கட்டி இழுத்து கொண்டு வந்தார் நவீன கிரிக்கெட்டின் டான் பிராட்மேன் என அழைக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித்.



அந்த தருணங்களில் ஸ்மித்தை அவுட்டாக்குவது எப்படி என்று இங்கிலாந்து பவுலர்கள் கூகுளில் தேடியதாக ஒரு மீம் கூட உண்டு.

https://youtu.be/yIMrCSDZ49E

எந்த பார்மில் அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொலைத்துவிட்டுச் சென்றாரோ, அதே இடத்திலிருந்து தனது கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அத்தியாயத்தை, தனது தோல்வியிலிருந்தும், காயங்களில் இருந்தும் மீண்டு வந்து, தொடங்கி மிளிர்ந்து கொண்டிருக்கும்  ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தில் மற்றொரு ஆஷஸ் தொடர் ஆட்டத்தைக் காணக் காத்திருக்கும் பல்வேறு ரசிகர்களின் நானும் ஒருவன்.

https://twitter.com/ICC/status/1170602679342718977?s=19





அணுவும் தமிழும் atomtamil.blogspot.com

Comments

Popular posts from this blog

ஐசிசி டெஸ்ட் உலகக்கோப்பை ஒரு அலசல்

வானியற்பியல் புத்தகம்