செவித்திறன் குறைபாடுடையோருக்கு உதவக்கூடிய செயலி

செவித்திறன் குறைபாடு உடையோர் படும் இன்னல்கள் சொல்லிமாளாது. அவர்களுக்கு பல்வேறு நவீன கருவிகள் வந்துவிட்டன. பலர் மருத்துவ ஆய்வுகளின் மூலம் தங்களது செவித்திறன் குறைபாடுகளைக் கண்டறிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சைகளோ அல்லது கருவிகளையோ பயன்படுத்தி தங்களது தினசரி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்கின்றனர். சிலர் தங்களுக்கு செவித்திறன் குறைபாடு இருக்கிறது என்பதைக் கூட உணராமல் இருக்கவே செய்கின்றனர். அவர்களுக்கு உதவக் கூடிய வகையில் கூகுள் புரட்சிகரமான ஒரு செயலியை சந்தைப்படுத்தி உள்ளது

தங்களின் ஆண்ட்ராய்டு தொலைபேசியில் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் வரக்கூடிய இந்த செயலியின் பெயர் sound amplifier என்பதாகும். இந்த செயலியானது வெளிப்புறத்தில் உள்ள சத்தங்களையும் மற்றும் இரைச்சலையும் போனில் உள்ள மைக் அல்லது ஹெட் போனில் உள்ள மைக் மூலம் ஒலிகளாக பெற்று அவற்றை மேம்படுத்தி காதுகளுக்குள் அனுப்புகிறது . இவ்வாறான சப்தம் உயர்த்தப்பட்ட ஒலியானது  காதுகளுக்குள் வரும்போது ஒரு நபர் தன்னை சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ள முடியும்.

தங்களுக்கு காது செவித்திறன் குறைவாக உள்ளது என்று சொல்வது சிலருக்கு சங்கோஜமாக இருக்கும். அப்படிப்பட்ட நபர்களுக்கு இந்த செயலி ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.


உங்கள் தொலைபேசியில் ஒரு ஹெட்போனை இணைத்துவிட்டால் போதும். அதன் மூலம் சுற்றி நடக்கும் ஒலிகளைப் பெற்று ஹெட்போன் வாயிலாக கேட்டுக் கொள்ள முடியும்.


அதன் முகப்பு அமைப்பு இவ்வாறு இருக்கும்



இந்த அமைப்பின் மூலம் இரு காதுகளுக்கும் தனித்தனியாக ஒலிகளை பிரித்து அனுப்ப முடியும். அதாவது ஒரு நபர் ஏதாவது ஒரு காதில் குறைபாடு உள்ளதாக உணர்ந்தால் அந்த காதுக்கு மட்டும் ஒலியை சற்று அதிகமாக அனுப்பிக் கொள்ள முடியும்.


மேலும் இந்த செயலியில் இரைச்சலை பிரித்து அனுப்பக்கூடிய வசதியும் உண்டு.



மேலும் எத்தகைய மைக்கில் இருந்து ஒலியைப் பெற முடியும் என்று கூட முடிவு செய்து கொள்ளலாம் .


ஒலியைப் பெறுவதற்கு தொலைபேசியில் உள்ள ஒலிவாங்கியா அல்லது செல்போனில் உள்ள ஒலிவாங்கியா என்று முடிவு செய்துவிட்டால் அந்த ஒலிவாங்கி வழியாக வரக்கூடிய ஒலிகளை இந்த செயலியானது பெருக்கிக் கொடுத்துவிடும். எனவே இந்த செயலியை தேவைப்படும் நண்பர்களுக்கு பரிந்துரைத்து அவர்கள் வாழ்விற்கு உதவுங்கள்.

செயலி இணைப்பு



மேலும் இது போன்ற பல சுவாரசியமான தகவல்களைத் தெரிந்து கொள்ள எமது டெலகிராம் சேனலையும் பார்வையிடுங்கள்




Comments

Popular posts from this blog

ஆஷஸ் தொடரும் ஸ்டீவ் ஸ்மித்தும்

ஐசிசி டெஸ்ட் உலகக்கோப்பை ஒரு அலசல்

ஏன் தோனி கொண்டாடப்படுகிறார்?