நிலவின் மறுபக்கம்
நிலா நிலா ஓடி வா..
சிறு வயதில் நம் அனைவரும் தெரிந்த பாட்டு இது. நமக்கெல்லாம் நிலா எப்படி இருக்கும் என்று கேட்டால், தெளிவாக சொல்லி விடுவோம். நிலவை பற்றி சங்க காலம் முதல் சந்திரயான் விண்கலம் வரை பேசுவோம்.
சரி இப்போது ஒரு கேள்வி. நாம் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்கிறோம் அல்லவா.. நிலவின் இன்னொரு பக்கத்தை யாராவது பூமியில் இருந்து கண்டதுண்டா..??
பூமியில் இருந்து பார்க்க வாய்ப்பே இல்லை.. நிலவு தனது ஒரு பக்கத்தை மட்டுமே பூமிக்கு எப்போதும் காட்டி வருகிறது. அப்படியானால் நிலவின் மற்றொரு பக்கம் எப்படி இருக்கும்???
அதற்கான தெளிவான படத்தை NASA வெளியிட்டுள்ளது.
NASA ஆய்வு மையத்தின் Lunar Reconnaissance Orbiter என்னும் விண்கலம் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்கிறது. அதன் மூலம் நிலவின் பின்பகுதி , அதாவது பூமியில் இருந்து பார்க்க முடியாத பகுதி இங்கு படத்தில் உள்ளது.
நாம் பார்க்கும் நிலவின் ஒரு பகுதி அழகு வாய்ந்ததாக இருக்கும்.. ஆனால் இதற்கு நேர்மாறாக நிலவின் பின்பக்கம் அதிகம் பள்ளங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது.
இதில் அதிகமாக விண்கற்கள் மோதியிருக்கலாம் என அனுமானிக்கப் படுகிறது.
இனிமேல் நம் கவிஞர்கள் "நிலவென்னும் தேவதை முகத்தில் சிறு சிறு பள்ளங்கள் " என பாடுவரோ...
மேலதிக தகவல்களுக்கு
nasa.gov. - NASA
https://lunar.gsfc.nasa.gov - LRO
ஸ்ரீ.நடராஜன்
அணுவும் தமிழும்

நிலாவைப் பற்றிய படம் மிக நன்று
ReplyDelete