பறவை பறந்த கவிதை
ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த ஒரு பறவை பறந்து விடுகிறது.. நம்மைப் பொறுத்தவரை சாதாரணமாய் முடிந்த ஒரு நிகழ்ச்சி இது..
ஆனால் இதை ஒரு கவிஞர் கவிதையாக்கி விடுகிறார்..
"காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே.."
நா.முத்துக்குமார் வரிகளில் ஜிவி.பிரகாஷ்குமார் இசையில் பூக்கள் பூக்கும் தருணம்.
காதல் சாதாரணருக்கே கவிதை உருவாக்கி விடும் போது நா.முத்துகுமார் என்னும்
பெருங்கவிஞரை என்னவெல்லாம் செய்யும்.. காதலைக் கொண்டாடித் தீர்த்திருப்பார்
இந்தப் பாடலில் ..
அந்த பறவை கிளையில் இருந்து பறந்ததும் அந்த
கிளையில் உள்ள இலைகள் பறவை ஏற்படுத்திய அசைவால் நடனம் தொடங்குகிறதாம்..
இயற்கையை நேசித்த கவிஞர் நா.முத்துகுமார்.
இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.. காதலில் இருக்கும் போது, நாம் காதலிப்பவர் நம் மனதில் ஏற்படுத்தும் காதலின் தாக்கம் என்பது, காதலனை/லியை சந்தித்து திரும்பிய பிறகும் இருக்குமாம்..
இந்த படத்தில் (மதராச பட்டிணம்) காதல் பகுதியே இந்த கரு தான்.. பரிதியும் துரையம்மாவும் நீண்ட நேரம் சந்திச்சுக்கிட்டதே இல்லை... ஆனாலும் அவங்க காதல், பிரிவினைகள் கடந்தும் அவர்களை போராட வைத்தது..
மொழி புரியா இரு காதலர்களுக்கு இடையே காதலே மொழியாய்...
இந்த பாடல் எல்லாருக்கும் காதலின் அவஸ்தையை கடத்திவிடும்.. கேட்டுப் பாருங்க
அணுவும் தமிழும் atomtamil.blogspot.com
Comments
Post a Comment