விண்வெளியில் இயங்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் விண்வெளி ஆய்வாளர் ஒருவர் தொழில்நுட்ப ப் பணிகளில் ஈடுபடுவதைக் காணலாம். பின்புலத்தில் பூமியையும் காணலாம்
தொடர்ச்சியான ஆய்வுகள் செய்து வரும்போது சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும் விதமாக நல்ல இசையைக் கேட்பது அல்லது நல்ல படங்களைப் பார்ப்பது எனது வழக்கம். அப்படி நான் பார்த்து வியந்த ஒரு திரைப்படங்களில் ஒன்று, மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம். அந்த படத்தை பற்றி நான் இங்கு எழுத விழைகிறேன். என்னடா இது அறிவியல் வலைப்பூவில் திடீரென சினிமா எழுதுகிறானே என்று வியக்க வேண்டாம் மக்களே.. இந்த திரைப்படம் பற்றி நீண்ட நாள் எழுதவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அதனால் தான் இந்த வலைப்பூவில் ஒரு திரைப்பட பதிவு. ஒரு சினிமா ரசிகனாக இப்படத்தில் நான் பார்த்த விஷயங்களை இங்கு பதிவிடுகிறேன். ஒரு நல்ல திரைப்படம் என்ன பண்ணும்... நல்ல ரசிகனை வியந்து பார்க்க வைக்கும். அப்படி ஒரு படம் தான் வெளியாகி, 32 ஆண்டுகள் ஆகியும் கூட இப்போதும் ஃபரெஷ்ஷாக இருக்கும் மைக்கேல் மதன காம ராஜன் படம். ரொம்பவே நுணுக்கமாக எடுக்கப்பட்ட மைக்கேல் மதன காமராஜன் படத்தைப் பற்றி நாம் இந்த நீள் பதிவில் காணலாம். இந்த திட்டத்தை பல பேர் பல விதமாக ரசித்த விலகியிருந்தாலும் எனது பார்வையில் தெரிந்த சில விஷயங்களை தொகுத்து எழுதுகிறேன்....
Astrophysics for People in a Hurry என்ற புத்தகம் (தமிழில் அவசரமாய் செல்வோருக்கு வான இயற்பியல் என்று சொல்லலாம்) இயற்பியலாளர் நீல் டீகிரீஸ் டைசனால் எழுதப்பட்டுள்ளது. புத்தகம் வானியல் குறித்த பல்வேறு விஷயங்களை அலசுகிறது. https://amzn.to/46alMaw காமா கதிர்கள் முதல் ரேடியோ அலைகள் ஈறாக ஒட்டுமொத்த மின்காந்த அலைகளைப் பற்றி மிக விரிவாக விளக்குகிறார் டைசன். எந்தெந்த அலை நீளங்களைக் கொண்டு எந்தெந்த வானியற்பியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்பது குறித்தும் தெளிவுற விளக்குகிறார். உதாரணமாக மைக்ரோ அலைகளைக் கொண்டு பிரபஞ்சத்தின் பின்புல வெப்பநிலையைக் கணக்கிடலாம் என்றும், ரேடியோ அலைகளைக் கொண்டு துடிப்பு விண்மீன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் எனவும் விரிவாக விளக்குகிறார். https://amzn.to/46alMaw பிரபஞ்சம் தோன்றிய முதல் மூன்று நிமிடங்களில் பிரபஞ்சம் எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பதில் ஆரம்பித்து பூமியின் உருவாக்கம் வரை முதல் இந்நூல் தெளிவாக விளக்குகிறது. முதல் எலக்ட்ரான் தோன்றியதிலிருந்து பிரபஞ்சத்தில் இன்றைய நிலை வரை சற்று விரிவாகவே அலசுகிறது. https://amzn.to/46alMaw இந்நூல் ப...
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றுவிட்டது. இரண்டாவது முறையாக இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் சென்று தோல்வியை பரிசாக பெற்றுத் திரும்பி உள்ளது. ஒரே ஆறுதல் என்னவெனில் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்திக்கவில்லை என்பதுதான். சரி இந்த தோல்விக்குக் காரணம் தான் என்ன? எவ்வாறு சரி செய்வது? இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு போன அணி எந்த விதத்திலும் தயாராகவே இல்லை. குறிப்பாக இந்திய வீரர்கள் ஐபிஎல் மைன்ட் செட்டில் இருந்து வெளிவரவே இல்லை. எப்போதும் டெஸ்ட் போட்டிகளுக்கு மனதளவில் ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராகி வருவார்கள். குறிப்பாக அவர்களுக்கு ஆஷஸ் தொடர் குறித்த மிகப்பெரிய தாகம் இருக்கும். அதன் விளைவாக தற்போது நடந்த பைனலுக்காக அவர்கள் வருவதை விட ஆஷஸ் க்காக தயாராகி வந்தனர். ஆஷஸில் விளையாடும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி மற்ற எந்த டெஸ்ட் அணிகளை விடவும் அசுர பலத்தோடு இருக்கும். இதுவும் ஒரு காரணம் அவர்களை நாம் வீழ்த்த முடியாததற்கு. இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் போட்டியில் நீண்ட நேரம் நிற்க வேண்டும் என்பதை மறந்து விட்டனர் போலும். குறிப்பாக டாப் ஆர்ட...
Comments
Post a Comment