தொடர்ச்சியான ஆய்வுகள் செய்து வரும்போது சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும் விதமாக நல்ல இசையைக் கேட்பது அல்லது நல்ல படங்களைப் பார்ப்பது எனது வழக்கம். அப்படி நான் பார்த்து வியந்த ஒரு திரைப்படங்களில் ஒன்று, மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம். அந்த படத்தை பற்றி நான் இங்கு எழுத விழைகிறேன். என்னடா இது அறிவியல் வலைப்பூவில் திடீரென சினிமா எழுதுகிறானே என்று வியக்க வேண்டாம் மக்களே.. இந்த திரைப்படம் பற்றி நீண்ட நாள் எழுதவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அதனால் தான் இந்த வலைப்பூவில் ஒரு திரைப்பட பதிவு. ஒரு சினிமா ரசிகனாக இப்படத்தில் நான் பார்த்த விஷயங்களை இங்கு பதிவிடுகிறேன். ஒரு நல்ல திரைப்படம் என்ன பண்ணும்... நல்ல ரசிகனை வியந்து பார்க்க வைக்கும். அப்படி ஒரு படம் தான் வெளியாகி, 32 ஆண்டுகள் ஆகியும் கூட இப்போதும் ஃபரெஷ்ஷாக இருக்கும் மைக்கேல் மதன காம ராஜன் படம். ரொம்பவே நுணுக்கமாக எடுக்கப்பட்ட மைக்கேல் மதன காமராஜன் படத்தைப் பற்றி நாம் இந்த நீள் பதிவில் காணலாம். இந்த திட்டத்தை பல பேர் பல விதமாக ரசித்த விலகியிருந்தாலும் எனது பார்வையில் தெரிந்த சில விஷயங்களை தொகுத்து எழுதுகிறேன்....
ஒவ்வொன்றும் அற்புதம் பாராட்டுகள்
ReplyDelete